ஆள்கடத்தல் எதிரான மசோதா நிறைவேற்றினால் குழந்தை கடத்தலை தடுக்க முடியும்

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஏப்., முதல் 2021 மார்ச் வரை 37 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். 54 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டன.

Update: 2021-07-30 15:39 GMT

ஆள்கடத்தல் எதிரான மசோதா நிறைவேற்றினால் மட்டுமே குழந்தை கடத்தலை தடுக்க முடியும் என்றார்  குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சார அமைப்பின் சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் வனராஜன். 

சிவகங்கை மாவட்ட  IRDSC அலுவலகத்தில் குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சார அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் வனராஜன், உறுப்பினர் ஜீவானந்தம் ஆகியோர் செய்தியாளர்களிடம் மேலும்  கூறியதாவது:

குழந்தை தொழிலாளர் முறை, குழந்தை திருமணம், குழந்தை காணாமல் போவது போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் போதிய நிதி ஒதுக்குவதில்லை. கடத்தலை தடுக்க தேசிய செயல்திட்டமும் இல்லை.

கொத்தடிமை முறை ஒழிப்பு சட்டப்படி அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுக்கள் முறையாக செயல்படவில்லை. கரோனா தொற்று காலத்தில் குழந்தை தொழிலாளர்கள், குழந்தை திருமணம் அதிகரித்துள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்., முதல் 2021 மார்ச் வரை 37 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். 54 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டன.

யுனிசெப் அறிக்கைபடி இந்தியாவில் 4-ல் ஒரு குழந்தைக்கு 18 வயது ஆகாமலேயே திருமணம் நடக்கிறது. மேலும், தேசிய குற்ற ஆவண காப்பக ஆவணங்கள் படி, 2019-ம் ஆண்டு மட்டும் 2,260 குழந்தைகளும், கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 9,453 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். ஆள்கடத்தல் எதிரான மசோதா நாடாளுமன்றத்தில் 10-க்கும் மேற்பட்ட முறை கொண்டு வரப்பட்டு நிறைவேறவில்லை.

மீண்டும் இந்த கூட்டத்தொடரில் பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும். ஆள்கடத்தல் எதிரான மசோதா நாடாளுமன்றத்தில் பத்து முறை கொண்டுவரப்படும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஆகவே, நடப்பாண்டில், இந்த  மசோதா நிறைவேற்றினால் மட்டுமே குழந்தை கடத்தலை தடுக்க முடியும் என்று தெரிவித்தார்

Tags:    

Similar News