300 ஏக்கர் விவசாய நிலத்தை மழை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க எம்எல்ஏ நடவடிக்கை

இதன் மூலம் மழை வெள்ளத்திலிருந்து சுமார் 300 ஏக்கர் நிலம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக எம்எல்ஏ செந்தில்நாதன் தெரிவித்தார்

Update: 2021-11-28 06:30 GMT

 மழை வெள்ளத்திலிருந்து சுமார் 300 ஏக்கர் நிலம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக எம்எல்ஏ செந்தில்நாதன் தெரிவித்தார்.

300 ஏக்கர் விவசாய நிலத்தை மழை வெள்ளத்தில் இருந்து  முன்கூட்டியே பாதுகாக்க  அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சிவகங்கை அருகே வாணியங்குடி பஞ்சாயத்து சாமியார்பட்டி ஓரிகுளம் கண்மாய் மற்றும் கடம்பங்குளம் கண்மாய் தற்போது பெய்த பருவ மழையால் நீர் நிரம்பி, உடையும் தருவாயில் உள்ளது. இவற்றை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் ஆய்வு செய்து,  உடையும் தருவாயில் உள்ள மடைகள் மற்றும் கரைகளை மணல் மூட்டைகளைக் கொண்டு அடுக்கி வைக்க கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.  மேலும் கண்மாய் நீர் உடைந்து விளைநிலங்களை பாதிக்காத வகையில், மறுகால் செல்லும் வாய்க்காலில் உள்ள முட்புதர்கள்லை ஜேசிபி இயந்திரம் கொண்டு அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன் மூலம் மழை வெள்ளத்திலிருந்து சுமார் 300 ஏக்கர் நிலம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக எம்எல்ஏ செந்தில்நாதன் தெரிவித்தார்.

Tags:    

Similar News