மூன்று மாநில தேர்தல் பயத்தால் வேளாண் சட்டம் வாபஸ்: எம்.பி கார்த்தி சிதம்பரம்

பிரதம மந்திரி வீடு திட்டத்தால் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மேலும் கடனாளியாகிறார்கள்

Update: 2021-11-26 00:00 GMT

 கார்த்தி சிதம்பரம்(காங்கிரஸ் எம்.பி)

பாம்பிற்கு பால் ஊற்றி வளர்த்தால் என்ன செய்யும் என தற்போது பிரதமப் மோடிக்கு  புரிந்திருக்கும்  என்றார் காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் 

சிவகங்கையில் மாவட்ட வளர்ச்சி ஒருஙகிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: பாதுகாப்பு அம்சங்கள் உட்பட அனைத்து விசயங்களிலும் மோடி அரசு தோல்வியடைந்துள்ளது என சுப்ரமணிய சுவாமி ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கிறார். பாம்பிற்கு பால் ஊற்றி வளர்த்தால் என்ன செய்யும் என தற்போது பிரதமர் மோடிக்கு  புரிந்திருக்கும். 

வேளாணா சட்டம் வாபஸ் அறிவிப்பு  மனமாற்றத்தால் அல்ல. மூன்று மாநில தேர்தலை கண்டு அஞ்சியே வேளாண் சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.  விவசாயிகளின் விடாப்பிடியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது. பிரதம மந்திரி வீடு திட்டத்தால் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மேலும் கடனாளியாகிறார்கள். பாதுகாப்பு அம்சங்கள் உட்பட அனைத்து விஷயங்களிலும் மோடி அரசு தோல்வியடைந்துள்ளது என சுப்ரமணியம் சுவாமி ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருப்பது குறித்த கேள்விக்கு பாம்பிற்கு பால் ஊற்றி வளர்த்தால் என்ன செய்யும் என தற்போது பிரதமர் மோடிக்கு புரிந்திருக்கும் என்றார் கார்த்திக் சிதம்பரம்.

முன்னதாக, சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மற்றும் எம்.எல்.ஏ க்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் மத்திய அரசு நிதியின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. 




Tags:    

Similar News