ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-09-25 15:24 GMT

ரடிகளை கைது செய்த காவல்துறையினரை மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். 

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் தமிழக டிஜிபி அவர்களின் உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் ஆலோசனையின் பெயரில் ரௌடிகளுக்கு எதிரான காவல்துறை நடவடிக்கை மாவட்டத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது .

பொது அமைதிக்கு எதிராக செயல்பட்டு வரும் ரௌடிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் ரௌடிகளை கண்டறிந்து, பொது அமைதியை நிலைநாட்டும் பொருட்டு, கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி முதல் இன்று 25ம் தேதி வரை மொத்தம் 757 நபர்கள் தணிக்கை செய்யப்பட்டு அவர்களில் 101 ரௌடிகள் மாவட்டம் முழுவதும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுவரை 48 நபர்களிடம் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ள மாட்டோம் என்று நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் பெறப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் வாகன சோதனை மற்றும் வீடுகளில் தீவிர சோதனை மேற்கொண்டு இதுவரை 71 வாள் மற்றும் 42 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவற்றை சட்ட விரோதமாக வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது . திறம்பட செயல்பட்டு பயங்கர ரடிகளை கைது செய்த காவல்துறையினரை மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். மேலும் தமிழக டிஜிபி  சைலேந்திரபாபு வழங்கிய வெகுமதி ரூ 25,000 காவலர்களுக்கு வழங்கினார்.

Tags:    

Similar News