நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கண்காணிப்பு பணிக்கு 4 நகராட்சிகளில் 514 கேமராக்கள்

சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது

Update: 2022-02-17 08:30 GMT

 சிவகங்கை பெண்கள் கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்களுவன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பார்வையிட்டனர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 4 நகராட்சிகளில் 514 கேமராக்கள் பொருத்தி தேர்தல் பணியை கண்காணிப்பு .

சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று 4 நகராட்சிகளை பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் 514 கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து சிவகங்கை பெண்கள் கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்களுவன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பார்வையிட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை ,காரைக்குடி, மானாமதுரை, தேவகோட்டை ஆகிய நான்கு நகராட்சிகளும் நாட்டரசன்கோட்டை, திருப்புவனம், இளையான்குடி, கோட்டையூர், கானாடுகாத்தான், கண்டனூர், பள்ளத்தூர் நெற்குப்பை ,புதுவயல், சிங்கம்புணரி , திருப்பத்தூர் ஆகிய 11 பேர் பேரூராட்சிகளில் பிப்ரவரி 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதில் நகராட்சியில் 226 வாக்குச்சாவடியில் 31 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை அடையாளம் காணப்பட்டுள்ளனர் சிவகங்கைக்கு 119, காரைக்குடிக்கு 214, தேவகோட்டைக்கு 119, மானாமதுரையில் 62 இடங்கள் என மொத்தம் 514 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது பேரூராட்சி பகுதிகளில் 205 வாக்குச்சாவடிகளில் 25 பதட்டமானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது வாக்குச்சாவடி மையங்கள் வாக்கு எண்ணும் மையங்கள் என மொத்தம் 549 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணிகள் நடைபெற உள்ளது மொத்தமாக மாவட்டம் முழுவதும் 1053 கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது

Tags:    

Similar News