சிவகங்கையில் ராணி வேலுநாச்சியாரின் 225 ஆவது நினைவு நாள்: திமுக சார்பில் அஞ்சலி

ராணி வேலு நாச்சியாரின் திருவுருவ சிலையை நாடாளுமன்றத்தில் நிறுவ வேண்டும்

Update: 2021-12-25 10:00 GMT

ராணி வேலுநாச்சியார் நினைவு நாளையொட்டி சிவகங்கையிலுள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய  திமுகவினர்.

சிவகங்கையில் ராணி வேலுநாச்சியாரின் 225 ஆவது நினைவு நாளையொட்டி  திமுக சார்பில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டு ஆங்கிலேயர்களை வீழ்த்திய வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 225வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டுசிவகங்கை அரண்மனை வாசல் அருகே வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் நினைவிடத்தில், சிவகங்கை ராணி மதுராந்தாக நாச்சியார், திமுக சார்பில் நகரச் செயலாளர் ஆனந்த் தலைமையில் ஏராளமானோர் அரண்மனை வாசலில் உள்ள வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து பிறகு நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் பின்னர் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்கள் வெயில் காலத்தில் குடிப்பதற்கு புதிய சிண்டாக்ஸ் தண்ணி பைப்பை திறந்து வைத்தனர்.

 அப்போது வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் திருவுருவ சிலையை நாடாளுமன்றத்தில் நிறுவ வேண்டும். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டு வென்ற ராணி வேலுநாச்சியாரின் புகழ் உலகம் முழுவதும் பரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடப்புத்தகங்களில் அவரது வரலாற்றை இடம்பெறச் செய்ய வேண்டும். வீரதீரச்செயல்கள் செய்த வீரர்களுக்கு, வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பெயரில் விருதுகள் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசிற்கு, ராணி வீரமங்கை வேலுநாச்சியார் அறக்கட்டளை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Tags:    

Similar News