வரைவு வாக்காளர் பட்டிலில் சிவகங்கை மாவட்டத்தில் 11,89,297 வாக்காளர்கள்:மாவட்ட ஆட்சியர் தகவல்

இந்த வாக்காளர் பட்டியல் இன்று முதல் இம்மாதம் இறுதி வரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்

Update: 2021-11-01 16:15 GMT

சிவகங்கை மாவட்டத்தில் இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில்11,89,297 வாக்காளர்கள் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்திய தேர்தல் ஆணையம் 2022 ஜனவரி 1ஆம் தேதியை ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம் வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரை வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்பு வெளியிட்டார்.

இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் 5 லட்சத்து 84 ஆயிரதக 6 ஆண் வாக்காளர்களும் , 6லட்சத்து 5ஆயிரத்தி 231 பெண் வாக்காளர்களும், 60 மூன்றாம் பாலினத்தவர் என 11 லட்சத்து 89ஆயிரத்து 297 பேர் இடம் பெற்றுள்ளனர்.மேலும் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் 1354 வாக்குச்சாவடி மையங்களிலும் வருவாய் கோட்ட அலுவலகங்கள். வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், 1354மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்காளர் பட்டியல் இன்று முதல் இம்மாதம் இறுதி வரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். மாவட்டத்திலுள்ள பொதுமக்களும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என சரிபார்த்து , பெயர் சேர்க்க படிவம் 6,  நீக்கம் செய்ய படிவம் 7,திருத்தம் செய்ய படிவம் 8, முகவரி மாற்றம் செய்ய படிவம் 8A ஆகியவற்றின் விண்ணப்பம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தலைவர் மதுசூதன ரெட்டி தெரிவித்தார்

Tags:    

Similar News