சிவகங்கையில் 20 வேட்பு மனுக்கள் ஏற்பு- 6 நிராகரிப்பு

Update: 2021-03-20 08:30 GMT

சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கான மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டதில் மொத்தம் 26 வேட்புமனுவில் 6 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந்தேதி நேற்றுடன் முடிவடைந்தது.இதை அடுத்து மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 10 மணி அளவில் சிவகங்கை மஜீத் ரோட்டில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் சிவகங்கை தேர்தல் அலுவலர் மற்றும் சிவகங்கை ஆர்டிஓ வுமான முத்துகழுவன் தலைமையிலும் சிவகங்கை மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் முத்துக்கிருஷ்ணன் சங்கரநாராயணன் முன்னிலையில் நடைபெற்றது .

சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 26 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று பரிசீலனையில் 20 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 6 பேரின் வேட்புமனுக்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.இப்பணிகள் முடிந்தவுடன், தேர்தலில் போட்டியிட தகுதியுடைய வேட்பாளர்கள் பெயர் வரிசைப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News