சிவகங்கையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சட்ட நகல் எரிப்புப் போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று அவசர வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

Update: 2021-06-05 10:31 GMT

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சட்ட நகல் எரிப்புப் போராட்டம்

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சிபிஐ விவசாய சங்க மாநில தலைவர் குணசேகரன் தலைமையில்  மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் அவசர சட்டங்களை எதிர்த்து சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை அகற்றக்கோரி டெல்லியில் கடந்த ஆறு மாத காலமாக கடும் மழையும் குளிரும் வெயிலும் பொருட்படுத்தாது இந்த கடுமையான கரோனா தொற்று காலத்திலும் பல்லாயிரம் பேர் போராடி வரும் நிலையில் மத்திய அரசின் சர்வாதிகார அடக்கு முறையை கண்டித்து ஜூன் 5 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் இந்த சட்ட நகல் எரிப்புப் போராட்டம்  நடைபெறுகிறது.அதன்படி  சிவகங்கையிலும் இந்த சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெருகிறது என்றார்

Tags:    

Similar News