அரசு மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ யோகா பயிற்சியினை முதல்வர் ஆய்வு செய்தார்

சிவகங்கை அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவ யோகா பயிற்சியினை கல்லூரி முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-06-03 05:09 GMT

யோகா பயிற்சியினை மருத்துவ கல்லூரி டீன் ரேகா ஆய்வு.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயற்கை மருத்துவ யோகா பயிற்சியை கல்லூரி டீன் ஆய்வு மேற்கொண்டார்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மூலம் கொரோனா விழிப்புணரவு மற்றும் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்த ஒரு வருடமாக கொரோனா தொற்று கடுமையாக பரவி வருகின்றது.சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களின் முயற்சியால் தினந்தோறும் வெளிப்புற நோயாளிகளுக்கு இயற்கை மருத்துவம் பற்றியும், யோகா பயிற்சி,மூச்சுப்பயிற்சி மற்றும் பல வகை ஆசனங்கள், லைப்பே மசாஜ், நீராவி பிடித்தல், என பல பயிற்சிகள் மருத்துவர் தங்கம் தலைமையிலான மருத்துவ குழுவினரால் வழங்கபடுகிறது.

மேலும் வெளிபுறநோயாளிகளுக்கு துளசி, கற்பூரவள்ளி | மிளகு போன்ற மூலிகைகள் அடங்கியஇயற்கை மூலிகை பெட்டகம் வழங்கப்படுகிறது. குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும் இயற்கை மூலிகை மருத்துவம், யோகா பயிற்சி அளிக்கபடுகிறது. இந்த பயிற்சியை மருத்துவ கல்லூரி டீன் ரேகா, மருத்துவ நிலைய அதிகாரி மீனாள் ஆகியோர் பார்வை யிட்டு மருந்து பெட்டகத்தை வெளிநோயாளிகளுக்கு வழங்கினார்கள்.

Tags:    

Similar News