ஏங்கோ..ஒரு நல்ல சேதி..! டாஸ்மாக் மூடியதால் சிவகங்கை மாவட்டத்தில் விபத்துகள் குறைவு

முழு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகளை மூடியதால் சிவகங்கை மாவட்டத்தில் விபத்துகள் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Update: 2021-06-06 11:20 GMT

சிவகங்கை மாவட்டம்.

ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் சிவகங்கை மாவட்டத்தில் விபத்துகள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. 

சிவகங்கை மாவட்டத்தில் ஊரடங்கால் போக்குவரத்து மற்றும் மதுக்கடைகளின்றி வாகன விபத்து குறைந்துள்ளது ஆண்டுதோறும் மே மாதத்தில் சராசரியாக 102 விபத்துகளில் 30 பேர் பலியான நிலையில், 2021 மே மாதத்தில் 34 விபத்துகளில் 5 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஜூன் 14 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது வாகன போக்குவரத்து இன்றி ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டாலும் டூவீலர்கள் மூலம் சுற்றித்திரிவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. கனரக போக்குவரத்து வாகனம் இன்றியும் அரசு மதுபான கடைகளை மூடியதாலும் போதையில் வாகனம் ஓட்டி விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் மற்றும் காயமடைவோர் எண்ணிக்கை குறைந்துள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் வாகன விபத்துக்கள் வெகுவாக குறைந்துள்ளது மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சராசரியாக100 க்கும் மேற்பட்ட விபத்துகளில் 30 க்கும் அதிகமானோர்மரணமடைந்த நிலையில் இந்தாண்டு விபத்துகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து 34 விபத்துகளில் 5 பேர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News