ஆக்சிஸன் வசதியுடன் 90 படுக்கைகள்

90 படுக்கைகளுக்கு ஆக்சிஸன் வசதி..

Update: 2021-05-10 11:48 GMT

சிவகங்கை மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூச்சு தின்றல் காரணமாக சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழ்நிலையில் மேலும் 90 படுக்கைகளுக்கு ஆக்சிஸன் வசதி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூச்சு தினறல் காரணமாக ஏராளமானோர் தினசரி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். ஏற்கனவே ஆக்சிஸன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் கொண்ட வார்டுகள் நிரம்பிய நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 40 படுக்கைகள் கொண்ட 4 வார்டுகளில் ஆக்சிஸன் வசதி செய்யப்பட்டது.

அந்த வார்டுகளும் முழுவதுமாக நோயாளிகளால் நிரம்பிய நிலையில் மீண்டும் தற்சமயம் ஆக்சிஸன் வசதியுடன் கூடிய90 படுக்கைகள் கொண்ட வார்டுகளை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் படுக்கைகள் அனைத்தும் தயாராக உள்ள நிலையில் தற்சமயம் ஆக்சிஸன் குழாய்களை நிறுவும் பணிகளில் டெக்னிசியன்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று அந்த பணிகள் முழுமையாக முடிவடையும் நிலையில் நாளை முதல் இந்த வார்டுகளும் செயல்பாட்டிற்கு வரும் என மருத்துவக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News