இரு மாதங்களில் 4500 பேருக்கு கொரானா தொற்று . இதுவரை 16 பேர் உயிரிழப்பு.

Update: 2021-05-19 00:00 GMT

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 4500 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் சென்னை மற்றும் மகராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களிடம் கொரானா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்

மேலும் இவர்களிடமிருந்து மாவட்டத்தில் உள்ள மற்றவர்களுக்கும் தொற்று பரவியது எனும் வதந்தியும் பரவியது.பாதிப்படைந்த அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கடந்த ஆண்டு சுமார் 6,500 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 126 பேர் மட்டுமே மரணமடைந்துள்ளனர்.

பின்னர் பாதிப்பு வெகுவாக குறைய ஆரம்பித்தது. தொடர்ந்து கொரானா இரண்டாம் அலை நாட்டில் அதிகரித்து து. சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை கொரானா பாதிப்படைந்த எண்ணிக்கை 11221பேரை தாண்டியுள்ளது மேலும் 9502 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் மேலும் 1507 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த இரு மாதங்களில் கொரானா இரண்டாவது அலையில் 4,500 பேர் பாதிப்படைந்துள்ளனர் இரண்டாவது அலையில் இதுவரை 16 பேர் மட்டுமே உயிர் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News