பெற்றோர்,மாணவர்களின் கருத்தை கேட்டு +2 தேர்வை நடத்த வேண்டும்-கார்த்திசிதம்பரம்

பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் கருத்துக்களை கேட்டு +2 தேர்வை நடத்த வேண்டும் என கார்த்திசிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-04 15:39 GMT

கார்த்திக் சிதம்பரம் 

பெற்றோர்,மாணவர்களின் கருத்தை கேட்டு,+2 தேர்வை நடத்த வேண்டும். கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இவ்வாறு கூறினார். மேலும்,பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை நடத்தாமல் மாணவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது, பல குழப்பங்களுக்கு வழிவகுக்கும் என்ற கார்த்தி சிதம்பரம், கொரானா காலத்தில் தேர்தலையே நடத்தினோம். அதைப்போல் 12ம் வகுப்பு தேர்வையும் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வை திருமண மண்டபங்களிலோ பெரிய பெரிய அரங்குகளிலோ நடத்தலாம் என யோசனை தெரிவித்தவர்,பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து கூறிய போது, மத்திய அரசின் அதிக வரி விதிப்பு,GST போன்ற தவறான பொருளாதாரக் கொள்கையே, நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு காரணம் என்றும், மத்திய அரசுக்கு மாற்றாக வேறு அரசாங்கம் அமையும் வரை பெட்ரோல் ,டீசல் விலை குறையவே குறையாது என்று உறுதிபட தெரிவித்தார்.

Tags:    

Similar News