சாலையில் கிடந்த பணம் ஏடிஎம் ஆதார் கார்டுகளை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

Update: 2021-07-08 15:10 GMT

சாலையில் கிடந்த பணம் ஏடிஎம் கார்டு ஆதார் கார்டு ஆகியவற்றை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டிவரும் கப்பலூர் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் சாலையில் கிடந்த ஏடிஎம், ஆதார் அட்டை மற்றும் பணம் ஆகியவற்றை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

ஆட்டோ ஓட்டுநர் ராமச்சந்திரன் இன்று காலை வழக்கம்போல் ஆட்டோ ஸ்டாண்ட் வந்து தனது ஆட்டோவை ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு பயணிகள் யாராவது சவாரிக்கு வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தார் அப்பொழுது ஆட்டோ ஸ்டாண்ட் அருகே சாலையில் 6900 ரூபாய் பணம் ஆதார் கார்டு ஏடிஎம் கார்டுபுதிய துணி தைக்க கொடுத்த தையல்கடை அட்டை ஆகியவை சாலையில் சிதறி கிடந்துள்ளதப் பார்த்தார்.

அவற்றை எடுத்த சேகரித்த ஆட்டோஓட்டுநர் ராமச்சந்திரன் நகர் காவல் ஆய்வாளர் சரவணனிடம் ஒப்படைத்தார் ஆய்வாளர் அவற்றிலிருந்து தையல் கடை அடையாள அட்டையை வைத்து தையல் கடைக்காரரிடம் விசாரணை செய்த பொழுது தேவகோட்டை சேர்ந்த கல்யாண கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கல்யாண கிருஷ்ணனை காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவரிடம்அவர் தவறவிட்ட பொருள்கள் குறித்து கேட்டறிந்து பின்னர் 6900 ரூபாய் பணம் ஏடிஎம் கார்டு ஆதார்கார்டு ஆகியவற்றை காவல் ஆய்வாளர் சரவணன் ஒப்படைத்தார் நேர்மையாக நடந்து கொண்ட ஆட்டோ டிரைவர் ராமச்சந்திரனை ஆய்வாளர் சரவணன் பாராட்டினார்

பணத்தை தவறவிட்ட கல்யாண கிருஷ்ணன் ஆட்டோ டிரைவருக்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் வகையில் ஆயிரம் ரூபாயை வழங்கினார் ஆனால் ஆட்டோ டிரைவர் ராமச்சந்திரன் இந்த பணத்தை வாங்க மறுத்து அவரை அனுப்பி வைத்தார்.

Similar News