காவலர்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி ஆய்வு

காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி ஆய்வு

Update: 2021-07-01 12:58 GMT

காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி ஆய்வு செய்தார். 

சிவகங்கை மாவட்டம் சிவாகங்கையில் பையூர் பிள்ளைவயல் குருப்பில் காவலர்கள், சிறைதுறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர்க்கு உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ் ரூ39 கோடி மதிப்பில் புதிதாக வீடுகள் கட்டபட்டு வருகின்றன. இதில் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்களுக்கு 40 வீடுகளும்.காவலர்கள், தலைமை காவலர்கள்க்கு 161 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது .

ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்களுக்கு ரூ 26 லட்சம் திட்ட மதிப்பிலும், காவலர் தலைமை காவலர்களுக்கு ரூ 20 லட்சம் திட்ட மதிப்பிலும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக தலைமை காவலர்கள், காவலர்களுக்கான வீடுகளில் 123 வீடுகள்க்கும் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர் களுக்கான வீடுகளில் 15 வீடுகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கட்டிமுடிக்கபட்ட மாதிரி இல்லத்தை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி மயில்வாகனன் மற்றும் சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Similar News