சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக செந்தில்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்

சிவகங்கை மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.செந்தில்குமார் இலக்கியவாதி, பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

Update: 2021-06-07 08:51 GMT

சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் 

சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக செந்தில்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.

சிவகங்கை மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.செந்தில்குமார் இலக்கியவாதி, பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய இவர் இன்று சிவகங்கை மாவட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பாளராக பெறுப்பேற்றார். முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் இலக்கியவாதியாகவும், சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்து வருபவர்.

குரூப்-1 தேர்வில் 2003இல் வெற்றி பெற்று நேரடியாக காவல்துறை கண்காணிப்பாளராக உத்தமபாளையத்தில் பணிபுரிய துவங்கினார். பின்னர் செங்கல்பட்டு, நன்னிலம், அரக்கோணம் போன்ற நகரங்களில் துணை கண்காணிப்பாளர் ஆகவும் பணிபுரிந்தார். பின்னர் சென்னை அடையாறு சரக உதவி ஆணையர் ஆகவும், கூடுதல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். சென்னை மாநகர பூக்கடை காவல்துறை துணை ஆணையராகவும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகவும், மதுரைக் காவல்துறையினர் ஆகவும் பணியாற்றியவர் த.செந்தில்குமார்.

புத்தூர் ஆபரேஷன் தேடுதல் வேட்டையில் அவரது பணிக்காக தமிழக முதலமைச்சரிடம் இருந்து ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையும், பதவி உயர்வு பெற்றார்.

இப்படி பல பன்முகத்தன்மை கொண்ட த. செந்தில்குமார் சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது மிகவும் வரவேற்புக்குரியதாகும்.

Tags:    

Similar News