சிவகங்கையில் காப்பீடுஅட்டை வாங்க கொரானாநோயாளி நேரில் வந்ததால் பரபரப்பு.

நேரில் வந்தால் தான் காப்பீடு அட்டை - கொரானா பாதித்த நபர் ஆம்புலன்சில் சென்று நேரில் கேட்டதால் அதிர்ந்த ஆட்சியர்.

Update: 2021-05-21 10:06 GMT

ஆம்புலன்ஸ் மூலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கொரானா நோயாளி.

சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள காப்பீட்டு அலுவலகத்தில் கொரானா பாதிப்பு அடைந்த நபர் நேரில் வந்து காப்பீட்டு அட்டை வாங்க வந்ததால் பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே லாடனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ் பிரபு. இவர் கொரானா பாதிப்புக்குள்ளாகியுள்ளார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் முதலமைச்சர் காப்பீடு அட்டை மூலமாக சிகிச்சை பெற முயற்சித்தார் காப்பீடு அட்டை இல்லாததால் மருத்துவர்கள் காப்பீட்டு அட்டை கொண்டு வருமாறு கூறியுள்ளனர்.

கொரானா பாதித்த நபர் சிவகங்கை காப்பீட்டு அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது நேரில் வந்தால் தான் காப்பீடு அட்டை வழங்க முடியும் என்று கூறிவிட்டனர். வேறுவழியின்றி தனியார் ஆம்புலன்சில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் முதலமைச்சர் காப்பீட்டு அலுவலத்தில் காப்பீட்டு அட்டை பெற அலுவலக பணியாளர்களிடம் கேட்டுள்ளார்.

தகவலறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி கொரானா பாதிப்புடன் இங்கு வரக்கூடாது பாதிப்படைந்த நபரிடம் கூறி மேலும் அலுவலக பணியாளர் பணியாளர்களிடம் இதுபோன்று நேரில் வர சொல்ல கூடாது என்றும் எச்சரித்துள்ளார். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது .



Tags:    

Similar News