தபால் வாக்குகள் குறித்து ஆலோசனை கூட்டம்

Update: 2021-03-06 12:15 GMT

சிவகங்கையில் தபால் வாக்குகள் குறித்து தேர்தல் அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையமானது தபால் வாக்குகள் பதிவு செய்வதில் பல்வேறு கூடுதல் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸ் பரவல் உள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தேர்தல் நாளன்று சிகிச்சையில் இருப்பவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய தபால் வாக்கு முறையை தேர்வு செய்யலாம் என அறிவுறுத்தியுள்ள நிலையில் அந்த வழிமுறைகளை கையாள்வது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

இதில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் தபால் வாக்குப்பதிவு சிறப்பு குழுவில் இடம்பெறவுள்ளவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா நோயாளிகள் ஆகியோருக்கு தபால் வாக்குகளை வழங்குவது மற்றும் அதனை சேகரிப்பது குறித்த வழிமுறைகளை எடுத்துரைக்கப்பட்டது. தேர்தல் அதிகாரிகளின் சந்தேகங்களுக்கு ஆட்சியர் பதிலளித்தார்.

Tags:    

Similar News