சாலையில் திரிந்த மாடுகளை கட்டிவைத்ததில் பசுமாடு உயிரிழப்பு

உரிமையாளர்கள் இழப்பீடு கோரி போராட்டம்.

Update: 2021-01-23 10:29 GMT

சிவகங்கை நகர் சாலைகளில் தனி நபர்களுக்கு சொந்தமான கால்நடைகள் சுற்றித்திரிவதுடன் போக்குவரத்திற்கு இடையூறாகி விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் தனியார் அமைப்பை சேர்ந்தவர்கள் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து சென்று அடைத்து வைப்பதுடன், கால்நடைகளின் உரிமையாளர்களிடம் மாடு ஒன்றிற்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதித்து வசூல் செய்துவருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அண்ணாநகர் பகுதியை சேர்ந்த காளையப்பன் என்பவருக்கு சொந்தமான பசுமாட்டை இந்த அமைப்பினர் சாலையில் சுற்றித்திரிந்ததாக கூறி பிடித்து வந்து தொழுவத்தில் அடைத்து வைத்ததுடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கேட்டுள்ளனர். அந்த தொகையை கட்ட முடியாத சூழ்நிலையில் தொழுவத்திலேயே பசு மாட்டை விட்டு சென்றார்.

இன்று அந்த பசுமாடு தொழுவத்தின் உள்ளேயே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர் அமைப்பினரிடம் விளக்கம் கேட்டதற்கு முழுமையான பதிலளிக்கவில்லை. ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்பட்டு தொழுவத்தில் அடைக்கப்பட்டுள்ள மாடுகளின் உரிமையாளர்கள் அவர் கூட அந்த தொழுவத்தின் வாயிலிலேயே அனைவரும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இறந்த மாட்டிற்கு உரிய இழப்பீடும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், இந்த அமைப்பினர் முறையான அரசு அனுமதி இன்றி செயல்பட்டு வருவதாகவும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News