கீரனூர் அருகில் இன்று அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.;

Update: 2021-06-15 12:45 GMT
கீரனூர் அருகே தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை  முன்னாள் அரசு வக்கீல் திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மூலிப்பட்டி மற்றும் மல்லம்பட்டி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி தொடங்கி அறுவடைக்கு தயாராகி வருகின்றனர்.

இப்பகுதி விவசாயிகள் தங்கள் பகுதிக்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தேவை என்று பலமுறை கோரிக்கை வைத்தனர்.

இக்கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அப்பகுதியில் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் அரசு வழக்கறிஞர்மான செல்லபாண்டியன் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைத்தார் .உடன் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News