கீரனூரில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் கடைவீதியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தலை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்ல பாண்டியன் திறந்து வைத்தார்.;
கொரோன வைரஸ் தொற்று மீண்டும் அதிக அளவில் பெருகி வருவதால், பொதுமக்களுக்கு திமுகவினர் கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசங்கள் வழங்க வேண்டும். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள கோடைகால தண்ணீர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்திருந்தார்.
அதன்படி இன்று புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தின் சார்பில் கீரனூர் கடைவீதியில் கோடைகால தண்ணீர் பந்தலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக் கவசங்கள் உள்ளிட்டவைகளை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் திமுகவினர் ஏற்படுத்தினர் இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் போஸ் வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.