வன்னியருக்கு 10.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கக்கோரி ஊராட்சி கூட்டத்தில் பா.ம.க. வெளிநடப்பு

வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஊராட்சி கவுன்சில் கூட்டத்திலிருந்து, பா.ம.க. கவுன்சிலர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-06 02:30 GMT

வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஊராட்சி கவுன்சில் கூட்டத்தில் இருந்து, பா.ம.க. கவுன்சிலர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஊராட்சி கவுன்சிலில், மொத்தம் 17 கவுன்சிலர்கள் உள்ளனர். அதில் அ.தி.மு.கவை சேர்ந்த சாரதா தலைவராகவும், தி.மு.கவை சேர்ந்த செந்தில்குமார் துணைத்தலைவராகவும் உள்ளனர். பா.ம.க வை சேர்ந்த வடிவேல் கவுன்சிலராக உள்ளார்.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட ஊராட்சி கவுன்சில் கூட்டம் அதன் தலைவர் சாரதா தøமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற பா.ம.க., கவுன்சிலர் வடிவேல், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 10.5 சதவீதம் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிடுக என்ற அச்சிடப்பட்ட பதாகையை ஏந்தி கலந்து கொண்டார். தொடர்ந்து உள்ள ஒதுக்கீட்டை வலியுறுத்தி அவர் கவுன்சில் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

இது குறித்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பா.ம.க தலைவர்கள் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ஆகியோர் ஆலோசனைப்படி, கடந்த ஆட்சியில், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், தற்போது நடைபெற்று வரும், திமுக ஆட்சியில் அதை அமல்படுத்து அரசு காலதாமதம் செய்து வருகிறது.

நடப்பு ஆண்டு பள்ளி, கல்லூரி சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது. இன்ஜினியரிங் கல்லூரி சேர்க்கைக்கு அண்ணா பல்கலை மூலம் விண்ணப்பம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், வன்னியர்களுக்கான உள்ள இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. இவற்றை கண்டித்து, மாவட்ட ஊராட்சி கவுன்சில் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளேன். இந்த அரசு உடனடியாக வன்னியருக்கு தனி இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். தற்போது நடக்கும் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில், இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் நிறைவேற்றவில்லை என கூறினார்.

Tags:    

Similar News