போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி

நாமக்கல்லில் இன்று சர்வதேச போதைப்பொருட்களுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-06-26 06:45 GMT

பட விளக்கம் : சர்வதேச போதைப்பொருளுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், டிஆர்ஓ சுமன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

சர்வதேச போதைப்பொருளுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், டிஆர்ஓ சுமன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி

நாமக்கல்,

நாமக்கல்லில் இன்று சர்வதேச போதைப்பொருட்களுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பது மற்றும் போதைபொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது என்ற நோக்கத்துடன் ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி சர்வதேச போதைப் பொருள் மற்றும் சட்ட விரோதமான கடத்தலுக்கு எதிரான தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச போதைப் பொருள் மற்றும் சட்ட விரோதன கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில், க்லெக்டர் உமா அறிவுறுத்தலின்படி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதையொட்டி, நாமக்கல் நகராட்சி பார்க் ரோட்டில், இன்று சர்வதேச போதைப் பொருள் மற்றும் சட்ட விரோதமான கடத்தலுக்கு எதிரான மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஸ் கண்ணன் தலைமையில், டிஆர்ஓ சுமன் முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கிய, போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட எஸ்.பி. ராஜேஸ்கண்ணன், டிஆர்ஓ சுமன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஏரளமான பள்ளி மாணவ மாணவிகள், என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள், தேசிய நலப்பணி மாணவர்கள், ரெட்கிராஸ் படையினர், நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் பேரணியில் கலந்துகொண்டு, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து பொதுமக்களிடையே போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஏடிஎஸ்பி தனராசு, கலால்துறை உதவி கமிஷனர் புகழேந்தி, சிஇஓ மகேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அருண், ரெட்கிராஸ் சங்க மாவட்ட செயலாளர் ராஜேஷ்கண்ணன் உட்பட பலர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News