மத்தியஅரசை கண்டித்து சாலை மறியல், 15 பேர் கைது

Update: 2021-01-06 10:00 GMT

கரூரில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை எதிர்த்து சாலைமறியலில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்தியஅரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த 40 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் இவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கரூர் பேருந்து நிலையம் அருகில் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு சிஐடியு அமைப்பு சார்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. கொரோனோவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7,500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முழக்கமாக எழுப்பியவாறு சாலைமறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags: