4 வழி சாலையாக மாறுகிறது காஞ்சிபுரம் கீழம்பி - செவிலிமேடு புறவழிச்சாலை

காஞ்சிபுரம் கீழம்பி - செவிலிமேடு புறவழிச்சாலை 4 வழி சாலையாக மாற்றப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் எவ வேலு அறிவித்துள்ளார்.

Update: 2024-06-23 14:59 GMT

செவிலிமேடு கீழம்பி புறவழிச்சாலை ( கோப்பு படம்)

கோயில், பட்டு நகரமென அழைக்கப்படும் காஞ்சிபுரத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளி மாவட்ட வெளி மாநில வாகனங்களில் வந்து செல்கின்றனர். இவர்களுக்கென பல்வேறு வகையில் நகரினை சுற்றி பல புறவழிச் சாலைகள் அமைந்துள்ளது. 

பெரியார் நகரில் இருந்து வந்தவாசி செல்லவும் புறவழிச் சாலை , காஞ்சிபுரம் நகரில் இருந்து வாலாஜாபாத் செல்லவும் புறவழிச் சாலை, வந்தவாசி தொகுதியில் இருந்து வரும் வாகனங்கள் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் வகையில் செவிலிமேடு கீழம்பி பிப்ரவரி சாலை என பல வகைகளில் நகரின் போக்குவரத்தை குறைக்கும் வகையில் கனரக வாகனங்கள் தொழிற்சாலை பேருந்துகள் செல்ல ஏதுவாக இந்த புறவழிச் சாலைகள் பயன்பட்டு வருகிறது. 

இந்நிலையில் செவிலிமேடு கீழம்பி சாலை இரு வழி சாலையாக பயன்பாட்டில் உள்ள நிலையில் பல நூறு கனரக வாகனங்கள் , கல்லூரி ,  தொழிற்சாலை பேருந்துகள் குறித்த நேரத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை குறித்த நேரத்தில் அடைய உள்ள நிலையில் இதனை நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது.

தற்போது தமிழக அரசின் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துணைக் கேள்வி ஒன்றினை எழுப்ப அனுமதி கோரியிருந்தார்.

அவ்வகையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், செவிலிமேடு கீழம்பி புறவழிச்சாலை அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளதால் மக்கள் நலன் கருதி அதை நான்கு வழிச்சாலையாக மாற்ற அரசு முன்வரவேண்டும் எனவும், தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் இதை நன்கு அறிவார் எனவும் வரும் கூட்ட தொடரின் இதற்கான அறிவிப்பை அமைச்சர் அறிவித்தால் நன்மை பயக்கும் என தெரிவித்தார். 

இதற்கு பதில் அளித்த நெடுஞ்சாலைத் தறை அமைச்சர் ஏ.வ.வேலு , சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் உண்மை எனவும் அந்த சாலையை  தான் பயன்படுத்தி வருவதாகவும் , கடந்த  திமுக ஆட்சி காலங்களில் இந்த  இரு வழிச்சாலை அமைக்கப்பட்டது என்பதும் இந்த ஆண்டு இதற்கான திட்ட மதிப்பு தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என சட்டமன்ற உறுப்பினருக்கு பதிலளித்து தெரிவித்தார்.

Tags:    

Similar News