இருளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு கிராம பொதுமக்கள் எதிர்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

Update: 2024-06-24 10:59 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் கொடுத்த பொதுமக்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து 577 மனுக்களை பெற்றார். 

பல்வேறு தரப்பட்ட மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் உரிய அலுவலருக்கு அதனை பரிந்துரை செய்தார். 

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார்குளம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கள் பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள இருளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவித்து மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில் தங்களுடைய கிராமத்தில் சர்வே எண் 159 இல் பழங்குடியினர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க போவதாக வருவாய்த் துறை மூலம் அறிந்து கொண்டதாகவும் ஏற்கனவே கிராமத்தில் சுமார் 60 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் எங்கள் கிராமத்தில் இன பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்குவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனை இல்லை எனவும் அவர்களுக்கு வழங்க தேர்வு செய்த இடம் கால்நடை மேய்ச்சலுக்கு பயன்பாட்டில் உள்ள இடம் என்பதும் பிற்காலத்தில் கிராமத்திற்கு தேவையான அங்கன்வாடி நூலகம் சமுதாயக்கூடம் மற்றும் பள்ளிக்கூட கட்டிடங்கள் என தேவைப்படும் நிலையில் இடம் இல்லாத சூழ்நிலை உருவாகிறது. 

ஆகவே அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட இடத்தில் கூடுதலாக உள்ள குடும்பங்களுக்கும் அங்குள்ள நிலங்களை தேர்வு செய்து அதனை பிரித்து வழங்குமாறு அம்மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் இம்மனுவில் மாவட்ட ஆட்சியருக்கு சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் அப்பகுதியில் ஆரம்ப பள்ளி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது எனவும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News