காஞ்சிபுரத்தில் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம்

திருநங்கைகள் , திருநம்பிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் தொடர்புத் துறைகளும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-21 11:45 GMT

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் , திருநங்கை ஒருவருக்கு தேசிய மற்றும் மாநில அடையாள அட்டை வழங்கிய ஆட்சியர் கலைச்செல்வி.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக  மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் , இன்று  சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி  கலந்து கொண்டு திருநங்கைகளுக்கு தேசிய மற்றும் மாநில அடையாள அட்டைகளை வழங்கினார்கள்.

சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக, இதர நலத்திட்ட உதவிகள் வழங்கும் தொடர்புத் துறைகளும் ஒருங்கிணைந்து சிறப்பு முகாம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டனர். மேலும், திருநங்கைகளுக்கான அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம் மற்றும் புதிய ஆதார் அட்டை வழங்குதல், வாக்காளர் அட்டை திருத்தம் மற்றும் புதிய அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை, திறன் பயிற்சி, இலவச வீட்டு மனை பட்டா, குடும்ப அட்டை ஆகியவற்றினை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இம்முகாம் மூலம் திருநங்கைகளுக்கு அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை திருநங்கைகள் , திருநம்பிகளுக்கு பெற்று பயனடைந்தனர். மேலும், இம்முகாமில் 7 - திருநங்கைகளுக்கு மாநில அடையாள அட்டை , 12 - திருநங்கைகளுக்கு தேசிய அடையாள அட்டை , 12 திருநங்கைகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை ஆகியவை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா, அரசு அலுவலர்கள் மற்றும் திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News