260 நபர்களுக்கு ரூ. 2 கோடியே 22 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள்

வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ரூ.2 கோடியே 22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2024-06-26 09:52 GMT

வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாளில் பட்டா வழங்கிய ஆட்சியர் கலைச்செல்வி.

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு புதிய போர்டலை அரசு உருவாக்கி வருவதாகவும், உயர்நீதிமன்றம் அறிவுரையால் மேய்கால் புறம்போக்கு இடத்திற்கு பட்டா தர இயலாத நிலை உள்ளது என ஜமாபந்தி நிகழ்வில் கூறி 260 நபர்களுக்கு ஒன்பது கோடி மதிப்பிலான நல திட்ட உதவிகளை ஆட்சியர் கலைச்செல்வி, சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் வழங்கினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் எனும் ஜமாபந்தி நிகழ்வு கடந்த 10 தினங்களாக காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட 5 வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்றது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் பிர்கா வாரியாக மனுக்களை பெற்று வந்தார். மேலும் உடனடி தீர்வுக்கான பரிந்துரைகளை செய்தார்.

ஜமாபந்தி இன்று நிறைவு பெற்ற நிலையில் , வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கலந்து கொண்டு 260 நபர்களுக்கு 2 கோடியே 22 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதில் இலவச பட்டா 26 நபர்களுக்கும் , வகைப்பாடு மாற்றம் வகையில் 40 நபர்களுக்கும் , கிராம கணக்கு வகையில் 94 நபர்களுக்கும் , 3 இலவச சலவை பெட்டி, பத்து நபர்களுக்கு வேளாண் இடுபொருள்கள் என மொத்தம் 260 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் பேசிய ஆட்சியர் ஜமாபந்தி நிகழ்வில், பொதுமக்கள் ஏராளமான பட்டா மாற்றம் கேட்டு மனு அளித்தனர். அதில் மேய்க்கால் நிலம் என்பதால் அரசு உயர் நீதிமன்ற அறிவுரைப்படி வழங்க இயலாத நிலையில் உள்ளது. மேலும் அதற்கு ஈடான நிலம் வழங்க கிராமத்தில் இடமில்லாததும் ஒரு காரணமாகவே அமைந்துள்ளது. கூடிய விரைவில் உயர்நீதிமன்றத்தில் இது குறித்து ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அரசு முயலும் எனவும் தெரிவித்தார்.

இதேபோல் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகைக்கு ஏராளமானோர் மனு அளித்துள்ளனர். இதற்காக அரசு தனியாக போர்டல் ஒன்றை உருவாக்கி வருகிறது.அதன் மூலம் அதில் விண்ணப்பித்து உரிய பயனடையலாம் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சதீஷ் , வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி ஸ்ரீதர் , ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், துணைத் தலைவர் சேகர் உள்ளிட்ட வருவாய் அலுவலர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News