கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கால்நடை மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Update: 2022-09-12 06:20 GMT

கால்நடை மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டு கால கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்பு (பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்) மற்றும் நான்கு ஆண்டு உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பி.டெக். படிப்புகள் உள்ளன.

அந்த படிப்புகளுக்கான 2022 - 23-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை இணையதளத்தில், இன்று காலை 10 மணி முதல் வரும் 26-ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். https://adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் வரும் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Similar News