நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு : அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வழங்கல்

மாநகராட்சி வார்டுக்கு ரூ 5 ஆயிரம், நகராட்சிக்கு ரூ2500, பேரூராட்சிக்கு ரூ1500 கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டனர்

Update: 2021-11-26 13:15 GMT

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை முன்னால் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன் , நத்தம் இரா.விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை முன்னால் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன் , நத்தம் இரா.விஸ்வநாதன் ஆகியோர்  இணைந்து வழங்கினர்.

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு கழகம் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், அந்தந்த மாவட்ட கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்களை வழங்கலாம் என ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளர் அறிவித்திருந்தனர்.

விருப்ப மனுக்கள் நேற்று நவ 26ம்தேதி முதல் 29ம் தேதி வரை வழங்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட கட்சி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கட்சி  நிர்வாகிகள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆர்வத்துடன் வழங்கினர். மாநகராட்சி வார்டுக்கு ரூ 5 ஆயிரம், நகராட்சிக்கு ரூ2500, பேரூராட்சிக்கு ரூ1500 கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரிடம் மனுவை வழங்கினார்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட  செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் , கிழக்கு மாவட்ட  செயலாளரும் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விஸ்வநாதன் இணைந்து விருப்ப மனுக்களை பெற்று  தொடக்கி வைத்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திண்டுக்கல் மாநகராட்சி, ஒட்டன்சத்திரம் நகராட்சி, கீரனூர் பேரூராட்சி, வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பேரூராட்சிகளான எரியோடு, பாளையம், வடமதுரை, அய்யலூர் உள்ளிட்ட பேரூராட்சிகளில் போட்டியிட  நிர்வாகிகள் விருப்ப மனுக்களை ஆர்வமுடன் வழங்கினர்.

இதில், மாநில கழக அமைப்பு செயலாளர் வி.மருதராஜ்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னம்பட்டி பழனிச்சாமி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சி.எஸ். ராஜ்மோகன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன், அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன், துணை தலைவர் வி.டி.ராஜன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

Tags:    

Similar News