பணிநிரந்தரம் செய்ய வேண்டும்:சுமைதூக்கும் பணியாளர்கள் கோரிக்கை

கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை யென்றால் பணியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்

Update: 2021-08-29 09:28 GMT

சுமைதூக்கும் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டிஎன்சிஎஸ்சி சுமைதூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் மாநில பொதுக்குழுக் கூட்டம் திண்டுக்கல் சிறுமலை பிரிவு தனியார் மண்டபத்தில் மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது.  மாநில தலைவர் வீரராகவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில், சிவில் சப்ளையில் பணிபுரியும் சுமைதூக்கும் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி கடந்த 1972 முதல் ஒவ்வொரு மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி வருகிறோம். கடந்த 2010- 11 ஆம் ஆண்டு , சுமைதூக்கும் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையின்படி பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், அடிப்படை சம்பளம் வழங்க வேண்டும், மாதந்தோறும் ஊதியம் வழங்க வேண்டும், பணியாளர்களுக்கு காப்பீட்டுத் தொகை ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் பணியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர். மாநில பொதுச் செயலாளர் சரவணன் மாநில பொருளாளர் பாஸ்கரன் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர்  கலந்துகொண்டனர்.


Tags:    

Similar News