போதையில் செத்து மிதந்தவராக கருதப்பட்டவர் மீட்கும்போது உயிரோடு வந்த அதிசயம்

திண்டுக்கல்லில் இறந்து தண்ணீரில் மிதப்பதாக கருதப்பட்டவர் உயிரோடு இருந்தது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

Update: 2022-01-16 13:15 GMT

இறந்தவராக கருதப்பட்டவர உயிரோடு இருந்தார்.

திண்டுக்கல் அருகே ஓடை பாலத்தின் அடியில் தண்ணீரில் மூன்று மணி நேரமாக மிதந்த உடல். தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறை இணைந்து மீட்க முயற்சித்தபோது உயிருடன் எழுந்து வந்த அதிசயத்தால்  திண்டுக்கல்லில் பரபரப்பு.

திண்டுக்கல் மாவட்டம்,ஆலகுவார் பட்டியைச் சேர்ந்த முருகவேல் என்பவர் தனியார் மில்லில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை வீட்டை விட்டு வெளியே வந்த முருகவேல் சீலப்பாடி பகுதியில் உள்ள கள்ளச்சந்தையில் மது வாங்கி அருந்திவிட்டு அருகே இருந்த ஓடை பாலத்தில் அமர்ந்து இருந்ததாக  கூறப்படுகிறது.

போதை தலைக்கேறியதால் தடுமாறிப்போய் கீழே விழுந்த முருகவேல். பாதை முழுவதும் தண்ணீர் இருப்பதாக நினைத்துக்கொண்டு ஓடை பாலத்தில் நிரம்பி இருந்த தண்ணீரில் நீந்திக் கொண்டே சென்றுள்ளார். மூன்று மணி நேரமாக மிதந்த முருகவேலை கள்ளச்சந்தையில் மது வாங்க வந்திருந்த மற்றொரு நபர் ஓடை பாலத்தின் அடியில் ஒரு உடல் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடலை மீட்க முயற்சித்த போது பெரும் சத்தத்துடன் தண்ணீரில் நீந்திக் கொண்டே ஓடை பாலத்தின் அடியில் இருந்து இறந்ததாக கருதப்பட்ட அந்த உடல் வெளியே எட்டிப்பார்த்தது.  இதனை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவரை மீட்டு அவர் சட்டைப்பையில் வைத்திருந்த அடையாள அட்டையை வைத்து தாடிக்கொம்பு அருகே உள்ள அலக்குவார் பட்டியைச் சேர்ந்த முருகவேல் என்பதை அறிந்தனர். பின்னர் அவரது  உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு  காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

முழு ஊரடங்கு நேரத்தில்  கள்ளச்சந்தையில் மது விற்பனை படு ஜோராக நடந்து வருவதால், இது போன்ற போதை ஆசாமிகள் நீரில் மிதக்கும் சாகசங்களும் நடக்கின்றன.

Tags:    

Similar News