தலைவி படம் இன்று திரைக்கு வந்தது. அதிமுகவினர் கொண்டாட்டம்

திண்டுக்கல்லில் தலைவி படம் இன்று திரையரங்கில் திரையிடப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அதிமுகவினர் கொண்டாட்டம்.

Update: 2021-09-10 08:37 GMT

திண்டுக்கல் திரையரங்கில் கூடியிருந்த அதிமுகவினர்

முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் தலைவி என்ற பெயரில் எடுக்கப்பட்டு இன்று (10.09.21) தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து திண்டுக்கல் கார்னிவல் திரையரங்கில் தலைவி திரைப்படம் திரையிடப்பட்டதை தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் திரையரங்கிற்கு வருகை தந்தனர். திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஏராளமான அதிமுகவினர் திரைப்படத்தை கண்டு களித்தனர்.

மேலும் திரைப்படத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கி அதிமுகவினர் கொண்டாடினர்.

Tags:    

Similar News