திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் நேரடி வழக்கு விசாரணை நிறுத்தி வைப்பு

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் நேரடி வழக்கு விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-06 03:04 GMT

பைல் படம்.

தற்போது கொரோனா 3-ம் அலை துவங்கியுள்ளதால் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, தொற்று பரவலை தடுக்க திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நேரடி வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து திண்டுக்கல்லில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், குமாஸ்தாக்கள், வழக்கறிஞர்கள், நுாலகம் அனைத்தும் மூடப்பட்டது. அவசர வழக்குகள் 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக மட்டுமே விசாரணை நடத்தப்படுகிறது.

அவசர வழக்குகள், நகல் விண்ணப்பங்கள், ஆர்டர் நகல்கள் பெறுதல் ஆகியவை மட்டும் 'இ-மெயில்' மூலம் நடைபெறுகிறது. விதிவிலக்கான நிகழ்வுகளில் மட்டும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி 'டிராப் பாக்ஸ்' மூலம் பெறப்படுகிறது.

வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உட்பட யாரும் மறு உத்தரவு வரும் வரை நீதிமன்றத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News