தன்னார்வலர்கள் உதவியுடன் நிவாரண பொருட்கள் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்

தன்னார்வலர்கள் உதவியுடன் 173 நபர்களுக்கு நிவாரணப் பொருட்கள் காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா வழங்கினார்.

Update: 2021-06-09 15:29 GMT

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் நடைபெற்ற நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அம்மையநாயக்கனூர் வர்த்தகர் சங்கம் சார்பாகவும், கொடைரோடு சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் சார்பாகவும் மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என மொத்தம் 173 நபர்களுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை, எண்ணெய் 1/2 லிட்டர், துவரம் பருப்பு 1/2 கிலோ, பாசிப் பருப்பு 1/2 கிலோ, காய்கறிகள் 6 கிலோ, பழங்கள் 2 கிலோ ஆகிய நிவாரணப் பொருட்கள் அடங்கிய பைகளை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா வழங்கினார்.

நிகழ்ச்சியில் நிலக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் மற்றும் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் சண்முக லட்சுமி உடன் இருந்தார்கள்.

Tags:    

Similar News