துணை மின் நிலையத்தில் தீவிபத்து : கரும்புகை சூழ்ந்ததால் சுற்றுச்சூழல் பாதிப்பு

மின்சார டிரான்ஸ்பார்மர் பயங்கர சப்தத்துடன் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்து கரும்புகை வெளியேறியது

Update: 2022-01-09 14:22 GMT

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா, கன்னிவாடி அருகே உள்ள மின் பரிமான அலுவலகத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் திடீரென நேரிட்ட தீவிபத்து

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, கன்னிவாடி அருகே உள்ள மின் பரிமான அலுவலகத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் திடீரென  நேரிட்ட தீவிபத்தால் சூழ்ந்த கரும்புகையால்சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட கன்னிவாடி, ஆலந்தூர், ஆண்டிபட்டி அருகே தமிழக அரசு மின் பகிர்மான அலுவலகம் உள்ளது. செம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து கன்னிவாடி மின்சார வாரிய அலுவலகத்திற்கு மின்சாரம் கொண்டு வரப்பட்டு இங்கிருந்து. கன்னிவாடி மின் பரிமான அலுவலகத்திலிருந்து கன்னிவாடி, பண்ணப்பட்டி, ஸ்ரீராமபுரம், காமாட்சிபுரம் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திடீரென மின்சார டிரான்ஸ்பார்மர் பயங்கர சத்தத்துடன் வெடித்து தற்போது கரும்புகையுடன் தீப்பிடித்து  எரிந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் மின்சார வாரிய துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இருந்தபொழுதும் செம்பட்டி மின்வாரிய பரிமாண அலுவலகத்தில் மின்சாரத்தை நிறுத்தினால் மட்டுமே தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியும். தற்போது செம்பட்டி மின்சார துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News