கூடைப்பந்து போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு

கூடைப்பந்து போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவர்களுக்கு திண்டுக்கல் ரயில்நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அறிக்கப்பட்டது.

Update: 2021-12-05 02:30 GMT

இந்தோ-நேபாள் இளைஞர்கள் விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று திண்டுக்கல் திரும்பிய மாணவர்களுக்கு ரயில்நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

யூத் ஸ்போர்ட்ஸ் கெவின் ஆஃப் இந்தியா நடத்திய இந்தோ-நேபாள் இளைஞர்கள் விளையாட்டு போட்டி நேபாளம் நாட்டில் உள்ள பொகராவில் நடைபெற்றது.

இதில் 29 வயதுக்கு உட்பட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் இந்தியாவை சேர்ந்த 12 பேர் கலந்து கொண்டனர்.

அதில் திண்டுக்கல்லை சேர்ந்த கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கார்த்திக்(23), பிரவீன்குமார் (22), துளசி ராஜ்(18), சந்தோஷ்(18), ராஜ்கபில்(18), கவின்குமார்(18) ஆகியோரும் கலந்து கொண்டு விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்றனர். இதனை தொடர்ந்து திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வெள்ளிப்பதக்கம் பெற்று திரும்பி வந்த அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மலர் மாலை அணிவித்து வரவேற்றனர். இந்த வெற்றி மூலம் அடுத்தகட்டமாக பல போட்டிகளில் கலந்து கொண்டு மேலும் பதக்கங்கள் பெற்று திண்டுக்கல்லுக்கு பெருமை சேர்ப்போம் என விளையாட்டு வீரர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News