திண்டுக்கல்: மக்கள் நீதி மன்றம் மூலம் ரூ. 3.68 கோடி தீர்வு தொகை வசூல் 84 வழக்குகளுக்கு தீர்வு

திண்டுக்கல்லில் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண மக்கள் நீதி மன்றம் மூலம் 84 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2021-07-11 02:30 GMT

திண்டுக்கல்லில் நடந்த மக்கள் நீதிமன்றம். 

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் மக்கள் நீதி மன்றம் மூலம் ரூ. 3.68 கோடி தீர்வு தொகை வசூல் செய்யப்பட்டது.  84 வழக்குகளுக்கு 9 அமர்வுகள் மூலம் நிரந்தர தீர்வு காணப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா தலைமையிலும், , நிரந்தர மக்கள் நீதிமன்றம் தலைவர் புவனேஷ்வரி முன்னிலையிலும் நடைபெற்றது. 

இதில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனா,மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்  மற்றும் சார்பு நீதிபதி ஆர்.பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த  84 வழக்குகளுக்கு 9 அமர்வுகள் மூலம் நிரந்தர தீர்வு காணப்பட்டு ரூ. 3 கோடியே 68 லட்சத்து 20 ஆயிரத்து 46 தீர்வு தொகை வசூல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News