கூட்டநெரிசலில் தொற்று பரவும் அபாயம்: பேருந்துகளை அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை

திண்டுக்கல்லில் கூட்டநெரிசல் காரணமாக தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பேருந்துகளை அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-01-17 09:23 GMT

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் பேருந்துகள்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சொந்த ஊர்களுக்குச் சென்று இன்று பணி நிமித்தமாக வெளியூர்களுக்கு செல்ல ஏராளமானோர் திண்டுகல் பேருந்து நிலையத்தில் கூடினர்.

அங்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேலும் சென்னை, திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்வதற்கு போதிய பேருந்துகள் இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். ஒரே பேருந்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிப்பதாகவும், இதன் மூலம் நோய்த்தொற்று பரவுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே விடுமுறை முடிந்து பணி நிமித்தமாக செல்லக்கூடிய பொதுமக்களின் நிலை கருதி, பேருந்துகளை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News