திண்டுக்கல்லில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

திண்டுக்கல்லில் சாலை மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2021-11-29 14:41 GMT

ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த குடியிருப்போர் நல சங்கத்தினர்.

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஐஸ்வர்யா நகர், சிறுமணி நகர், பகவான் சாஸ்திரி நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு ஒன்று கொடுக்க வந்தனர்.

அந்த மனு குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், எங்கள் குடியிருப்பு பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் .

இப்பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி அமைக்கவில்லை.  சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது அதற்கான பணிகள் நடைபெற்ற நிலையில் பாதியிலேயே விட்டுவிட்டு சென்றனர்.

இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 20 நாட்களாக மழை பெய்து வரும் காரணத்தினால் இப்பகுதி முழுவதும் வெள்ள காட்டில் மிதக்கும் வீடுகள் ஆகவே காட்சி அளிக்கின்றது.

மேலும் இரவு நேரங்களில் இப்பகுதி முழுவதும் இருட்டாகவே உள்ளது இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

மேலும் எங்கள் பகுதிகளுக்கு விரைவில் சாக்கடை கால்வாய் வசதி மற்றும் சாலை வசதி மற்றும் தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடைப்படை தேவைகளை சரி செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News