திண்டுக்கல் பூ சந்தையில் விலை பன்மடங்கு உயர்வு: மல்லிகை ஒரு கிலோ 1,500

சுபமுகூர்தம், ஓணம் பண்டிகை , வரலட்சுமி விரதம், மொகரம் பண்டிகையை ஒட்டி மலர்கள் சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு உயர்வு .

Update: 2021-08-19 06:14 GMT

திண்டுக்கல் பூ மார்க்கெட்.

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பூ சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தைக்கு திண்டுக்கல், நத்தம், ஆத்தூர், வேடசந்தூர் போன்ற பகுதிகளில் இருந்து அதிக அளவு பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். மேலும் இங்கிருந்து சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலம் போன்ற பகுதிகளுக்கு தினந்தோறும் இங்கிருந்து பூக்கள் அனுப்பப்படுகிறது.

கடந்த ஒன்றரை வருடங்களாக வைரஸ் தொற்று காரணமாக சுப நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் நடத்த அரசு பல்வேறு கடடுபாடுகள் விதித்திருந்தது. இதனால் பூக்கள் விலை கடுமையான வீழ்ச்சி அடைந்தது. இந்நிலையில் விழாக்கள், சுபநிகழ்ச்சிகள் நடத்த அரசு சில தளர்வுகளுடன் அனுமதி அளித்துள்ளது. எனவே நாளை சுபமுகூர்த்த நாள், தொடர்ந்து மொகரம் பண்டிகை , வரலட்சுமி விரதம், நாளை மறுநாள் சனிக்கிழமை கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் இருப்பதால் பூக்களின் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது.

இதனையொட்டி திண்டுக்கல் பூ சந்தையில், மல்லிகை ஒரு கிலோ ஆயிரத்து 500 ரூபாய், முல்லைப்பூ 600 ரூபாய் ,கனகாம்பரம் ஆயிரம் ரூபாய், சம்மபங்கி 500ரூபாய், கோழிக்கொண்டை 150 ரூபாய், அரளிப்பூ 150 ரூபாய், செண்டுமல்லி 80 ரூபாய், செவ்வந்தி 150 ரூபாய் என அனைத்து பூக்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags:    

Similar News