திண்டுக்கல் இரயில் நிலையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலையை கைப்பற்றிய போலீசார்..!

Update: 2021-06-16 11:23 GMT

திண்டுக்கல் இரயில் நிலையத்தில் மூன்று பேக்குகளில் அரசு தடை செய்யப்பட்ட ரூபாய் அறுபதாயிரம் மதிப்பில் புகையிலை போலீசார் கைபற்றி உணவு பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைத்தனர். 

திண்டுக்கல் இரயில் நீலையத்தில் தூத்துக்குடி - மைசூர் எஃஸ்பிரஸ் வந்த போது இரயில்வே காவல் ஆய்வாளர் அருண் ஜெயபால்சார்பு ஆய்வாளர் மணிகண்டன் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது மதுரையை சேர்ந்த கணேஷ் லால் ஜென் இவரது மகன் அசோக்குமார் என்பர் முதல் வகுப்பு பெட்டியில் மூன்று பேக்குகளை வைத்து விட்டு தப்பி விட்டார்.

அங்கிருந்த பைகலை சோதனையிட்டதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையில இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தன்.பைகளை கைப்பற்றிய போலீசார் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை வரவளைத்து மூன்று டிராவல் பேக் நிறைய இருந்த அரசால் தடை செய்யப்பட்ட 30 கிலோ புகையிலையை ஒப்படைத்தனர். இதன் மதிப்பு சுமார் 60.000 என உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் . சிவராமபாண்டியன் தெரிவித்தார். செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News