நீதிமன்றத்தில் ஜோதிமுருகனை ஆஜர்படுத்த கோரி மகிளா நீதிமன்றத்தில் போலீசார் மனு

இன்று 26.11.2021 கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Update: 2021-11-25 23:30 GMT

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் (பைல் படம்)

திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய வழக்கில், போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்த கல்லூரி தாளாளர் அமமுக பிரமுகர் ஜோதிமுருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திமன்றத்தில் ஜோதிமுருகனை ஆஜர்படுத்த கோரி திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.

திண்டுக்கல் பழனி சாலையில் முத்தம்பட்டி அருகே செயல்பட்டு வரும் சுரபி கல்லூரியின் தாளாளரும் அம்மா மக்கள் முன்னேற்ற கலகத்தில் அம்மா பேரவை இணை செயலாளராக இருந்த ஜோதி முருகன் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக எழுந்த புகாரை அடுத்து, மூன்று மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் இரண்டு வழக்குப்பதிவு செய்து கல்லூரியில் விடுதி காப்பாளர் அர்ச்சனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்ட வந்த கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் கடந்த இரண்டு நாள்களுக்கு  முன்பு திருவண்ணாமலை மாவட்டம்,போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து ஜோதி முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்த கல்லூரி தாளாளர் அமமுக பிரமுகர் ஜோதி முருகனை சம்பந்தப்பட்ட வழக்கிற்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  அனுமதி கோரி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி புருசோத்தமனிடம் மனுத்தாக்கல் செய்துள்ளனர்,

இதை அடுத்து இன்று   26.11.2021 கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஜோதி முருகன் ஆஜராகும் போதும் வழக்கு தொடர்பான உண்மை நிலைகளை அறியும் வகையில் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த தாடிக்கொம்பு காவல் நிலைய விசாரணை ஆய்வாளர் லூர்து விக்டோரியா மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

கல்லூரித் தாளாளர் ஜோதிமுருகன் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யும்போது, பாலியல் ரீதியாக கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறியது தொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் ஏற்கனவே ஜோதிமுருகன் பயன்படுத்திய சொகுசு காரையும், அவர் பயன்படுத்திய செல்போன் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடும்போது, மகளிர் அமைப்புகள், தன்னார்வலர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர்களால்  சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாவட்ட நீதிமன்றத்தில் போலீஸார்  கூடுதல் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News