திண்டுக்கல்லில் பொங்கல் பொருட்கள் வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்த மக்கள்

திண்டுக்கல்லில் பொங்கல் பொருட்கள் வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்த மக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-01-14 06:23 GMT
திண்டுக்கல் நகரில் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக சமூக இடைவெளியின்றி மக்கள் குவிந்தனர்.

பொங்கல் பண்டிகையானது தமிழகம் முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் கரும்பு ,மஞ்சள் கிழங்கு ,மா இலை தோரணம், தேங்காய், பழம் மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

இதனால் நகரின் நான்கு ரத வீதிகளிலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக நகரின் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக காவல் துறையினரோ, போக்குவரத்து காவல் துறையினரோ இல்லாத காரணத்தினால் நீண்ட நேரமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலைகளில் காத்திருக்கும் அவலமானது ஏற்பட்டது.

மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பெரும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டது.

Tags:    

Similar News