புதை சாக்கடை அடைப்பை சீரமைக்க லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்: பாஜக கண்டனம்

லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாஜவினர் ஆர்ப்பாட்டம்

Update: 2021-09-14 10:30 GMT

திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் புதை சாக்கடை  குழாய் அடைப்பை சரிசெய்ய, அதிகாரிகள் லஞ்சம் கேட்பதற்கு கண்டனம் தெரிவித்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது

திண்டுக்கல் பகுதிகளில் உள்ள 48 வார்டுகளில் புதை சாக்கடை  அமைக்கும் பணி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு  தொடங்கப்பட்டது. இன்னும் பல்வேறு வார்டுகளில் புதைசாக்கடைத் திட்டப்பணிகள்  முழுமையடையாமல் உள்ளது. இதனிடைய தற்போது பணிகள் முடிந்து செயல்பட்டுவரும் பாதாள சாக்கடை திட்டப் பகுதிகளில் அடைப்புகளை  சரி செய்ய வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பணம் லஞ்சமாக கேட்பதாக புகார் எழுந்து வருகிறது.

இதைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் பெறுவதற்கு எதிராகவும்  லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News