சோறு கண்ட இடம் சொர்க்கம், காசு கொடுப்பவரே கடவுள்: நாடோடிகளின் வாழ்க்கை

சோறு கண்ட இடம் சொர்க்கம், காசு கொடுப்பவரே கடவுள் என நாடோடி ராஜாக்களாக தமிழகம் முழுவதும் வலம்வரும் இவர்கள் செல்லாத இடங்களே கிடையாது.

Update: 2022-01-22 06:15 GMT

நாடோடி ராஜாக்கள் 

தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி பகுதிகளைச் சேர்ந்த மூன்று ராஜாக்கள், ஒரு மகாராணி (பிச்சைகாரர்கள்) தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் குடியிருப்பு மற்றும் திருவிழாக்கள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களிடம் யாசகமாக பெறக்கூடிய காசுகளை தினந்தோறும் ஓரிடத்தில் அமர்ந்து சரிவிகிதமாக பங்கிட்டு வயிற்றுப் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

அனைவரையும் பாதித்த கொரோனா இந்த நான்கு ராஜாக்களை மட்டும் விட்டு வைக்குமா?  கொரோனா. ஊரடங்கு காலத்தில் சரியாக யாசகம் கிடைக்காமல் திண்டாடுவதாக தெரிவித்த அவர்கள், குடும்பம் இல்லாததால் சோறு கண்ட இடம் சொர்க்கமாகவும் ,காசு கொடுப்பவரே கடவுளாகவும் தங்களுக்கு தெரிவதாக கூறுகின்றனர். 

அவர்கள் மேலும் கூறுகையில், கடைகளில் கிடைக்கும் காசுகளை விட வீடுகளில் யாசகம் கேட்டு செல்லும்போது கிடைக்கும் சோறு தான் எங்களுக்கு பெரிது. யாசகம் வாங்குவதற்கு வீடுகளுக்கு தான் செல்ல வேண்டும், கடைகளுக்கு தான் செல்ல வேண்டும் என்பது இல்லை. காவல் நிலையத்திற்கும் செல்லலாம் என யாசகம் கேட்டு காவல் நிலையத்திற்கும் செல்வோம் என்று கூறினர்.

சில நேரங்களில் பேருந்து பயணமாக இருந்தாலும் காசு கொடுக்காமல் இதுவரை இவர்கள் பயணித்தது கிடையாது. தங்களது இந்த நாடோடிகளின் வாழ்க்கை தினந்தோறும் ராஜாக்களின் வாழ்க்கையாகவே இருப்பதாக கூறுகின்றனர்.

கோவில் திருவிழா காலங்களில் திருக்கோயில்கள் பூட்டப்பட்டதால் ராஜாக்களின் வாழ்க்கை சற்று கவலையாகவே இருப்பதாக  தெரிவித்தனர்.

நாடோடிகளாக இருந்தாலும் நாங்கள் ராஜாக்கள் தான் என மார்தட்டி சிரித்தவாறே அடுத்த ஊரைத் தேடி நடைபயணம் மேற்கொள்ள ஆரம்பித்தனர் இந்த ராஜாக்கள் .

Tags:    

Similar News