உணவு கிடைக்கவில்லையா? எங்களை கூப்பிடுங்க: திண்டுக்கல் எஸ்.பி.

கொரோனா ஊரடங்கால் உணவு கிடைக்காதவர்கள், காவல்துறையை அழைக்கலாம் என்று திண்டுக்கல் எஸ்.பி. அறிவித்துள்ளார்.

Update: 2021-05-28 05:24 GMT

கொரோனா பரவலை தடுப்பதற்கு, தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் தனியாக வசிக்கும் முதியவர்கள் சாலையோரம் மற்றும் மேம்பாலங்களில் கீழ் பகுதிகளில் தங்கி இருக்கும் ஆதரவற்றோருக்கு உணவு கிடைக்காமல் சிரமப்படும் நிலை உள்ளது.
இதை தவிர்க்கும் வகையில்,  திண்டுக்கல் மாவட்டத்தில் அது போன்ற நபர்களுக்கு, போலீசார், தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர். இத்தகைய நபர்களுக்கு உதவும் வகையில் போலீஸ் முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஆகியோர், சிறப்பு  ஏற்பாடு செய்துள்ளனர்.
அதன்படி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதவர்கள் போலீசார் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம்.  அவர்களுக்கு உணவு அத்தியாவசிய பொருட்கள் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் உடனடியாக வழங்கப்படும்.
உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிப்பவர்கள்,  போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை, 9498101520 எனும் எண்ணிலும், நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறையை 9176098100என்ற எண்ணிலும், போலீஸ் கட்டுப்பாட்டு அறையை9498181204 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என, எஸ்.பி. ரவளிப்ரியா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News