கடைகள் ஒதுக்கக் கோரி வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம்

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-08 15:51 GMT

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் கடைகள் கேட்டு வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள காந்தி மார்க்கெட் மிகவும் சேதம் அடைந்து காணப்பட்டது இதையடுத்து கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் காந்தி மார்க்கெட் சீரமைக்கப்பட்டு புதிய கடைகள் அமைக்கப்பட்டன

ஆனால் தற்போது வரை வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்நிலையில் திண்டுக்கல் காந்தி மார்கெட் சில்லறை வியாபாரிகள் கடைகள் 126, மொத்த வியாபாரிகள் கடைகள் 126 உள்ள நிலையில் கொரோன தொற்று காரணமாக மார்கெட் திறக்க அனுமதிக்காத நிலையல் வெளிப்புறமாக கடைகளை போட்டுக் கொள்வதற்க்கு மாநகராட்சி அனுமதி அளிக்க வேண்டும்,

மேலும் மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரம் செய்யக் கூடாது, காந்தி மார்கெட் திறப்பிற்கு பிறகு 3 லட்ச ருபாய் வைப்புத்தொகை மாநகராட்சியிடம் கொடுக்கப்பட்ட பழைய வியாபரிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

என்பது உட்பட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் 100க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி ஆணையரை கண்டித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கள்

Tags:    

Similar News