திண்டுக்கல் மாவட்டத்தில் 1225 இடங்களில் துவங்கிய மெகா தடுப்பூசி முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 1225 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

Update: 2021-09-12 04:57 GMT

திண்டுக்கல் கமலா நேரு மருத்துவமனையில் கொரோனா பணி வழங்காததால் காத்திருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 1225 இடங்களில் தடுப்பூசி முகாம் துவங்கியது. கொரோனா தடுப்பூசி முகாம் செல்ல முடியாமல் ஆசிரியர்கள் சாலையில் காத்திருப்பு .முறையான பயிற்சிகள் வழங்கவில்லை என குற்றச்சாட்டு .

தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்றும், இதில் வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் துவங்கி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் துவங்கியது.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, ஆத்தூர், வேடசந்தூர், நிலக்கோட்டை, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் 1225 இடங்களில் 7 தொகுதிகளிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இதில் ஆசிரியர்களை பணியாளார்களாக நியமித்து அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் காலை 6 மணி முதலே திண்டுக்கல் கமலா நேரு மருத்துவமனையில் பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.

காலை 9 மணி வரை மூன்று மணி நேரம் காத்திருந்தும் தங்களுக்கு சரியான பணி வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். மேலும் இந்த முகாம் குறித்து எங்களுக்கு எந்தவித பயிற்சியும் தங்களுக்கு அளிக்கவில்லை என கூறினர்.

காலையில் இருந்து காத்திருந்து உணவு மற்றும் எந்த அத்யாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்யவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

Tags:    

Similar News